பிரிவெல்லாம் பிணைக்கும் போது
தூரமெல்லாம் நெருங்கும் போது
கனவெல்லாம் நினைவாகும் போது
தூரிகையெல்லாம் உனை வரையும் போது

கவிதையெல்லாம் நீயாகும் போது
நாளெல்லாம் உன் மணம் வீசும் போது
இருளெல்லாம் உன் விழி ஆகும் போது
காற்றெல்லாம் உன் நினைவை மீட்டும் போது

நடை எல்லாம் உன் வாசல் வரும் போது
குரலெல்லாம் உன் வார்த்தைகள் பேசும் போது
செவியெல்லாம் நம் மகன் பேச்சில் நிறையும் போது
என் உள்ளமெல்லாம் நீயாகும் போது

என்னவளே தூரமெல்லாம் தூரமில்லை!
துயில் கொள்ளடி
தூரமெல்லாம் தூரமில்லை!1

 

Advertisements