தமிழில் இதுவே எனக்கு முதல் கட்டுரை. இவ்வாறு சொல்லிக்கொள்வதில் எனக்குப்  பெருமை இல்லை. இதுவரை நான் எழுதிய கட்டுரைகள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ஆங்கிலத்தில் நன்றாக பேசும் திறன் உள்ளது என்று என் மனம் சொல்லியது, ஆனால் எழுதுவதில் நிறைய சிரமம் இருந்தது. ஆகையால் ஒரு வலைப்பதிவை உண்டாக்கி ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன்.

நம் வாழ்வில் மிக அதிகமாக சந்தோசமாக இருக்கும் காலம் என்றால் அது பள்ளிக்  காலமாக மட்டும் தான் இருக்க வேண்டும். ஏன் இந்த பதிவை தமிழில் எழுதினேன், மனம் சார்ந்த மற்றும் உணர்வுகள் சார்ந்த அனைத்தையும் ஒருவரால் தாய் மொழியில் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.

IMG-20140201-WA0013

இன்றைய மாணவர்கள்

என் அம்மா, என் பள்ளி பருவத்தை பற்றி கேட்டால் மிகுந்த ஆர்வத்துடன் கதை சொல்லுவார். ஏன் என்றால் என் அன்னை என்னை முதலில் பிரிந்த நாள் அது , ஆனாலும் என் பிள்ளை என்றாவது ஒரு நாள் நன்றாக படித்து பெரிய மனிதன் ஆகிவிடுவான் என்று மனதில் கொண்டு ஆசையோடு பிரிந்த நாள்.

அடிக்கடி என் அம்மா சொல்வது, “இவன நான் ஸ்கூல் வரைக்கும் கூப்பிட்டு போயிடுவேன், அதுவரைக்கும் அழ மாட்டான், அந்த ஸ்கூல் கேட் கிட்ட போய்ட்டு என்னை திரும்பி பாப்பான் – அப்ப அவன் கண்ணுல இருந்து மட்டும் தண்ணி வரும் ஆனா சத்தம் வராது. ஏன்ன ஸ்கூல் ஆயா அடிசிடுமா” – இதை சொல்லிட்டு என் அம்மா சிரிக்க அரம்பிச்சிடுவாங்க. 

நானும் என் அண்ணனும் ஒரே ஸ்கூல், ரெண்டு பேரையும் அம்மா ரெடி பண்ணி அனுப்புரதுக்குள்ள ராமாயணம் மகாராபரதம் எல்லாம் முடிஞ்சிடும். நானும் அண்ணனும் சண்ட போட்டு முடிச்சு இருப்போம், எங்க அம்மா சமைச்சி முடிச்சி இருப்பாங்க. எங்க ரெண்டு பேரையும் அப்பா தான் ஸ்கூல்ல  கூப்பிட்டு பொய் விடுவார். மதியம் ஸ்கூல் முடிஞ்சிடும், அண்ணாவும் நானும் ஸ்கூல் வாசல்ல உக்காந்துகிட்டு அப்பா வருவாரான்னு ரோட்ட பாத்துட்டு இருப்போம்.

அப்ப ரெண்டு பேரும் ஒரு கல்ல ரோடு மேல போட்ருவோம், ஏதாவது வண்டி வந்து அந்த கல்லு மேல ஏறுன அப்பா வந்துருவாருனு நினைத்து கொள்வோம். இப்படி நிறைய நாள் விளையாண்டு இருக்கோம். ஒரு நாள் அப்பா வரதுக்கு லேட் ஆயிடுச்சி, நான் சும்மாவே அழுவேன் சொல்லவா  வேணும். அன்னிக்கு காவிரி ஆறு பாண்டிச்சேரி பக்கம் திரும்பிடுச்சு.

ரெண்டாவது படிக்கிற வரைக்கும், நம்பல யாரும்அசைக்க முடியாது, வருஷம்முழுவதும் வகுப்புல படிப்புல முதல் மாணவன் தான். அம்மாவுக்கு வேலை கிடைத்து, அம்மா, நான் , அண்ணா மட்டும் கோவை மாவட்டம் சென்றோம். அங்க மூன்றாம் வகுப்பு சேரணும், பள்ளியில் நுழைவுதேர்வு வச்சி தான் எடுப்போம் சொல்ல, நானும் அண்ணனும் டெஸ்ட் எழுத ஸ்கூல் பொய் பாத்த, கேட்ட கேள்வில 50% தான் தெரிஞ்சுது. சும்மா விட்ருவோமா, காவேரி நீரை திறந்து விட்டு ஸ்கூல்ல இடத்த வாங்கிட்டேன்.

ஆனா மத்தவங்களுக்கு, இது பெரிய சாதனை, உங்க பையனுக்கு இந்த ஸ்கூல்ல சீட் வாங்கிடீன்களா சொல்ல. என் அப்பாவுக்கு ஒரே பெருமை, ஒரே பாராட்டு தான். கவனிப்பு தான் வீட்ல. ஆனா நான் அழுதது அப்பாவுக்கு நல்லா தெரியும், இதையும் சொல்லி சொல்லி மானத்த வாங்கிடுவாறு. காரமடை , SRSI Matric ஸ்கூல் தான் அந்த மதிப்பிற்குரிய பள்ளி. அண்ணா பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சார், நான் ஏழாம் வகுப்பு வரைக்கும்.

ரொம்ப சந்தோசம் ஆனா நாட்கள் என்று சொன்ன, இந்த ஸ்கூல்ல படிச்சதா  தான் இருக்கணும். நானும் அண்ணாவும் சைக்கிள் எடுத்துக்கிட்டு மெயின் ரோடு, மண் ரோடு என்று பாக்காம, சும்மா சுத்திட்டு இருப்போம். தினமும் காலைல சரிய சைக்கிள எடுத்து ஸ்கூல் போய்ட்டு திரும்பி வருவோம், வரும் வழில சைக்கிள் டயர்ல ஓட்டை விழுந்துடும். கொஞ்ச நாள் கடைல விட்டோம், போக போக நாங்களே சைக்கிள் கடை வைக்கிற அளவுக்கு பழுது பாக்க அரம்பிச்சிடோம்.

ஷேர் ஆட்டோ அப்படி ஒன்னும் இல்ல அந்த காலத்துல. நல்ல வேலை தப்பிச்சேன், இல்லன பேப்பரல கட்டி வச்ச சுண்டல் மாதிரி நசிங்கில போய் இருப்பேன். ஆனா சைக்கிள்ல பயணித்த நாட்கள் நெஞ்சில் அழியா நினைவுகள்.

இப்ப அப்படியே சேலம் மாநகராட்சிக்கு திருப்புறோம். இங்க எட்டாம் வகுப்பு “யுவ பாரதி” என்ற பள்ளியில் சேர்த்தார் அப்பா. இங்க நான் மட்டும் தான், அண்ணாவ வேற ஸ்கூல்ல செர்த்துட்டாங்க. ஆனாலும் நண்பர்கள் அதிகம் இந்த ஸ்கூல்ல, முதல் முறையாக பள்ளியின் சார்பில் விளையாண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கிய நாள், பின்னர் பள்ளிக்கு கிரிக்கெட் போட்டியில் மண்டல அளவில் கோப்பை பெற்று வந்தோம். அன்னைக்கு ஸ்கூல்ல வந்து எங்களோட சேஷ்டை தாங்க முடியல. முதல்ல என் பள்ளிக்கு வாங்கி கொடுத்த அங்கிகாரம்.

IMG-20140201-WA0014

என் பள்ளி ஆசிரியர்களோடு ஒரு புகைப்படம்

இந்த ஸ்கூல்ல தான், நடனம் ஆடியது, ஓவியம் வரைந்தது, விளையாடியது எல்லாம்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிஞ்சுது, தேர்வுக்கு நான் பாக்கெட் புல்ல “கலர் கலரா பேனவ சொறிகிட்டு போயிருக்கேன்”. அடுத்து, பனிரெண்டாம் வகுப்பு பக்கத்துக்கு ஸ்கூல்ல ஒரு பதினோரு நண்பர்கள் சேந்தோம். பள்ளி வாழ்கைய முடிச்சோம்.

என்ன புதுசா பள்ளி பருவத்து நினைவு என்று உங்களுக்கு தோன்றலாம். ஒரு வாரத்துக்கு முன்ன ஒரு தொலைபேசி அழைப்பு ” நாங்க யுவ பாரதி ஸ்கூல்ல இருந்து பேசுறோம், பாலச்சந்தர் அஹ பேசுறது” என்று வினவினார்கள். ஆம் என்று சொன்னதும், ஆண்டு விழா வச்சி இருக்கோம், நீங்க கண்டிப்ப வரணும் என்று சொல்ல. ஒரே சந்தோசம். விடுவோமா, ஸ்கூல்க்கு போய்ட்டு, என் பள்ளியை, பள்ளி பருவத்தின் இனிமையை உணர்ந்து வந்துவிட்டேன்.

Advertisements