கவிதைச்  சரம் கோர்த்திருந்தேன்

உன் வார்த்தைக்காக காத்திருந்தேன்

நிலவு தன்னை ரசித்திருந்தேன்

நிலவு உன்னை ரசிக்க காத்திருந்தேன்

புத்தகம் பலவாசித்து இருந்தேன்

நாவல் உன்னை படிக்க காத்திருந்தேன்

வந்தடைந்தாய் வானதியே

வார்த்தைகளை உதிர்த்தாய்

கவிதைகள் பொருள் இழந்தன

முகம் தன்னை காண்பித்தாய்

நிலவு பொலிவு இழந்தது

உன் சந்திப்பை கதை வடித்தால்

புத்தகங்கள் கலை இழக்கும்

இவை அனைத்தும் நடப்பதே வரம்

உன்னை கரம் பிடித்தால்

அதுவல்லவா என் வாழ்க்கைக்கு வரம்!!

– பாலச்சந்தர்

Image

Advertisements