நாம் சிதைத்த இயற்கை

நம்மை சிதைக்கும் நேரமிது
விழித்தெழு மனிதா விழித்தெழு
சூரியன் உன்னை சுட்டு எரிக்கையில்
இயற்கை குடை –
மரத்தை நினைவில் வை
தேகம் தாகம் எடுக்கையில்
இயற்கை வரம் –
மழை நீர் சேகரிப்பை நெஞ்சில் வை
சந்தோசம் தொலைந்து நிற்கையில்

இயற்கை தோழர்கள் –
பறவைகள், விலங்குகள் மீது பாசம் வை
வாட்டி நீ வதைத்தாலும்

வாழ வச்சி பார்க்குமடா இயற்கை
தெரிந்து கொள்ளடா மனிதா
நீ வாழும் வாழ்க்கை செயற்கை
waiting
Advertisements