நெஞ்சம் நிமிர்ந்து அச்சம் தவிர்த்த

தமிழன் தோல் கிழித்து செல்கையில்
கண்ணீரில் பயணித்திருக்கும்!
நான் தமிழன் உயிர் பறிகின்றேன் என்று
கர்வம் கூட கொண்டிருக்கும்!
உயிர் பறிக்கும் பொது கூட
உதிரம் கொண்டு போத்தி
பாதுகாக்கின்றான் தமிழன்
என்று அறியாத தோட்டா அது.
தமிழ் மண்ணில்
தஞ்சம் புகுந்து இருக்கின்றது
தமிழ் மண்ணின் ஈரம் உணர்கையில்
தமிழன் பாசம் புரிந்து இருக்கும்
அவன் உயிர் குடித்தாலும்
உறங்க இடம் கொடுப்பான் என்று
உணர்ந்து இருக்கும்
நயவஞ்சகன் துப்பாக்கியில் இருந்ததை எண்ணி
வெக்கப்பட்டு சிதைந்து கொண்டு இருக்கும்
தேகம் துளைத்த தோட்டாக்கள்
ஆலயம் தேடி அலைகின்றன

பாவமன்னிப்பு வேண்டி சரண் அடைகின்றன!
Advertisements