தூரிகையில் வண்ணம் பூசி
காற்றில் வரைய ஆசை
கானல்  நீரில்
தாகம் தணிக்க ஆசை
காலை பணியில்
பயிர் வளர்க்க ஆசை
பட்டொளி வீசும் நிலவில்
கால்கள் பதிக்க ஆசை
ஆசைகள் எவையாயினும்
வேடம் கொண்டு வென்றிட ஆசையில்லை
தொலை தூர பயணத்தில் – ஆசைகளை
சீக்கிரம் அடைந்திட ஆசையில்லை
ஆழமாக யோசித்து பார்த்தால்
ஆசை கொள்வது எளிது – அவற்றை
வெல்லுவது எளிதல்ல
Advertisements