பாற்கடலும் தேன் ஆனது போல்

ஓர்  உணர்வு

ஆயிரம் களிறு அடக்கியது போல்
ஓர்  நிறைவு
ஐந்தே நிமிடங்களில் இமயம் எட்டிய
ஓர்  கனவு
ஐம்பூதம் என் கையில் சேர்ந்ததை போல்
ஓர்  உணர்வு
என்னவள் விழி வழி சென்று மூளை சலவை செய்ததாய்
ஓர்  நினைவு
இவையாவும் கொடுத்தது ஓர்  உறவு
காதல் உணர்வின் உறவுImage
Advertisements