சொட்ட சொட்ட பெய்தாலும்

சரம் சரமாய் பெய்தாலும்
சின்ன சின்ன உயிருக்கும்
உலகாளும் உயிருக்கும்
உயிர் துளி நீ தானே.
ஆலங்கட்டி மழையால்
பலர் மனம் கவர்ந்தாய்
அடை மழையால்
தாவர தாகம் தீர்த்தாய்
அடடா உன்னை வர்ணிப்பதே அழகு.
உன் ஒரு துளி பட
மனம் வெறுக்கும்
உடல் முழுவதும் நீ படர
மனம் மாறும்
மறுமுறை படமட்டாயா என ஏங்கும்.
ஐம் பூதங்களில்
உனக்கு மட்டும் தான் தவமிறுப்பர்
ஐந்தறிவு பிராணிகளை
ஆறறிவு ஜீவன்கள் மணம் முடிப்பர்
அதுவே அழகு! என்றும் நீயே அழகு!!
மழையே மனம் குளிர
மறுபடி ஒரு முறை வருவாயா!
Advertisements