நான் கண்ட பாரதம்
நசுங்கி கிடக்க
நெஞ்சில் சுமையோடு
வீதி வழி வந்தேன்
சுதந்திர இந்தியாவை
வளம் பெற்ற இந்தியாவை
காணவந்த கருவிழியில்
ஊழல் பிசாசையும்
ஒழுக்கமற்ற அரசியல்வாதிகளையும்
ஒற்றுமை இல்லா மக்களையும்
காண்கையில், விழி இருந்தும் பயனில்லை பாரத மாதா!
தெருவெல்லாம் மரம் வாழ
அதை அண்டி மக்கள் வாழ
சிட்டு குருவி தினம் சிரித்த வீதி
வான் உயர கட்டிடங்கள் நிரப்புகையில்
மயானம் போல காட்சி அளிக்குதடி!
மக்களின், எம்மக்களின் நிலைகண்டு
என் ஆவியே தூக்கில் தொங்க துடிக்குதடி!
– பாலச்சந்தர் ( பாரதியார் நினைவு தினத்தையொட்டி எழுதப்பட்ட கவிதை)
Advertisements