இன்றே தொடங்கு

எழுது உன் சரித்திரம்

முத்துகள் உருவாக

சிப்பிகள் வேண்டும்

இலக்கினை அடைய

முயற்சிகள் வேண்டும்

பாட்டு உருவாக

சந்தங்கள் வேண்டும்

உச்சங்கள் தொட

உத்வேகம் வேண்டும்

சரித்திரம் படைக்க

சாதனைகள் வேண்டும்

கவிதைகள் படைக்க

கற்பனைகள் வேண்டும்

பாசம் புரிய

குடும்பம் வேண்டும்

ஒன்றை உருவாக்க

மற்றொண்டு வேண்டும்

சார்ந்தே இருக்கும் உலகில்

தனிமையில் தேயாதே

துன்பங்களில் தொலைந்து

உயிரை உலுக்காதே

நாளை உண்டென்று

இந்நாளை ஏய்காதே

தோல்வியை கண்டு

துவண்டு விடாதே

விழித்து எழுந்து வா

அதிரட்டும் பூமி!!

Advertisements