பூவே உனைகண்ட நொடி
பூஜ்யம் புவியீர்ப்பில்
பூலோகம் உறைந்ததடி
கவிக்குவியல்கள் உன் பின்னே
கடைபோட்டு காத்து கிடக்குமடி
வர்ணித்து வர்ணித்து
வார்த்தைகள் களைக்குமடி
உன் நிழலே உனைதொட
உயிர் தியாகம் செய்யுமடி
உன் கண்கள் நனைகையில்
கருமேகம் கரைந்து
உன் விழி நீர் மறைக்குமடி
அகராதியே உன் பெயரை
அழகின்பின் இணைக்குமடி
இவையாவும் உனைதொடர
வரிசையில் நின்று என் கால்கள் நோகுதடி
கற்பனைகள் கரையுடைக்க
காலங்கள் புரண்டோட
பூவே உனக்காக காத்துக்கிடப்பேனடி 🙂
Advertisements