புயல் காற்றில்

பூவை ஏந்தி செல்வோம்

எரிமலையில்

கால்கள் நனைப்போம்

மின்னல் ஒளியில்

புகைப்படம் எடுப்போம்

நொடியில் ஆயிரம்

கதைகள் படைப்போம்

விண்ணை முட்டும்

எங்கள் எழுச்சி சத்தம்

இமயம் எட்டும்

எங்கள் சிந்தனை அனைத்தும்

தோல்வியில் குளித்தோம்

வெற்றியில் நனைய

நாளை எங்களை பற்றி

உலகம் பேசும்

சாதனை படைப்போம் வாடா

தோழா!!

Advertisements